புதன், 2 மார்ச், 2011

மஹா சிவராத்திரி வாழ்த்துக்கள் (2011).

7. வைஷ்ணோதேவி-அமர்நாத் யாத்திரை (2010)–பயண அனுபவங்கள்

7. வைஷ்ணோதேவி - அமர்நாத் யாத்திரை (ஜூலை2010) பயண அனுபவங்கள்

6 - வைஷ்ணோதேவி-அமர்நாத் யாத்திரை (2010)–பயண அனுபவங்கள்

6 - வைஷ்ணோதேவி-அமர்நாத் யாத்திரை (2010)–பயண அனுபவங்கள்

5. வைஷ்ணோதேவி-அமர்நாத் யாத்திரை(2010)-பயண அனுபவங்கள்.

5. வைஷ்ணோதேவி-அமர்நாத் யாத்திரை(2010)-பயண அனுபவங்கள்.

வியாழன், 10 பிப்ரவரி, 2011

2. (நிறைவு இடுகை) ஓரிக்கை மஹா ஸ்வாமிகள் மணிமண்டப தரிசனம்.

ஓரிக்கை மஹா ஸ்வாமிகள் மணிமண்டப தரிசனம்..


நிறையப் பேர்கள் ஆட்டோக்களில், டூ வீலர்களில் என்று வந்து பரமாச்சாரியாரின் அருட் தரிசனம் பெற்ற பின்னர் மணி மண்டபத்தை சுற்றி வந்து அழகான கட்டிட வேலைப்பாடுகளைக் கண்டு வியந்து கொண்டிருந்தார்கள்.

சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் கட்டிடக் கலையைப் பின் பற்றி நூறு தூண்களுடன் அழகாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது இந்த மணி மண்டபம்.

கலைமாமணி கணபதி ஸ்தபதி அவர்களின் மேற்பார்வையில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த மண்டபத்தின் விதானத்தில் ஒரே கல்லினால் ஆன சங்கிலிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. யாளியின் வாய்க்குள் உருளும் கல்லுருண்டை என ஒவ்வொன்றும் பழங்கால சிற்பக் கலையின் பெருமைகளை விளக்கும் அற்புத உருவச்சிலைகள்.

மஹா நந்தி ஒன்று கம்பீரமாக வீற்றிருக்கிறது. இன்னமும் செதுக்கி முடியவில்லை.

திவாஜியின் அருமையான படங்கள் எல்லா விவரங்களையும் ஏற்கனவே சொல்லி இருக்கின்றன என்பதினால் அவைகளை மீண்டும் நான் சொல்ல போவதில்லை.

விநாயகப் பெருமானை வணங்கி விட்டு. சங்கநிதி, பதுமநிதி ஆகியோர் துவார பாலகர்களாக வீற்றிருக்க, கருவறைக்குள் நுழைந்தோம். கருவறைக்குள் ஒரு அழகிய மண்டபம் அமைக்கப்பட்டு அதில் மகாஸ்வாமிகளின் திருவுருவம் அமர்ந்த நிலையில் ஆசி கூறும் வகையில் ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது. காஞ்சி முனிவரே மீண்டும் உயிர் பெற்று நேரில் வந்து நம் எதிரே அமர்ந்திருப்பதைப் போல காட்சி அளிக்கிறது. பார்க்கும் போது நமக்கு எழுவது ஒரு சுகமான அனுபவம்.

அங்கே ஒரு கனபாடிகள் தமது பேரன் என்று நினைக்கிறேன். ஐந்து வயது இருக்கலாம், அந்த குழந்தை கண்ணீர் என்ற குரலில் வேதம் ஓதிக் கொண்டிருக்க அந்தப் பெரியவர் கூடவே வேதத்தை ஓதிக் கொண்டிருந்தார். கண்களைக் கவரும் வகையின் அந்தக் குழந்தையின் முகத்தில் அப்படி ஒரு தேஜஸ். மகாஸ்வாமிகள் மோனப் புன்னகையுடன் அந்தக் குழந்தை வேதம் ஓதுவதை கேட்டு அந்தக் குழந்தையை ஆசீர்வதித்துக் கொண்டிருப்பது போன்ற ஒரு உணர்வு அங்கே அலை மோதிக் கொண்டிருந்தது.

நாங்கள் மகாஸ்வாமியை பயபக்தியுடன் தரிசித்தோம். அங்கு வைக்கப்பட்டிருந்த விபூதி, குங்குமம் எடுத்து தரித்துக் கொண்டோம்.

பக்கத்தில் உள்ள ஒரு பள்ளியில் (மீனாக்ஷி மெட்ரிகுலேஷன் பள்ளி) இருந்து இரண்டு மூன்று பஸ்கள் வந்து சேர அவற்றில் இருந்து பள்ளிக் குழந்தைகள் நிறைய பேர் வந்தார்கள். அனைவரும் மகாஸ்வாமியை தரிசித்து விட்டு விபூதி, குங்குமம் எடுத்து இட்டுக் கொண்டார்கள்.

அவர்கள் அனைவரும் பின்னர் வெளியே வந்து கோவிலை சுற்றி வந்து பிரதான வாசலிலும், மற்ற வாயில்களிலும் இருந்த யானை சிற்பங்களில் ஏறி அமர்ந்து கொண்டு குதூகலமாக சந்தோஷித்துக் கொண்டிருந்தார்கள்.

அவர்கள் வாழும் இந்த ஓரிக்கைப் பகுதியில் இந்த மணிமண்டபம் அமைந்திருப்பதில் சொல்லொணா மகிழ்ச்சியும் பெருமையும் அவர்களுக்கு.

குமார்ஜி நன்கொடை செலுத்திவிட்டு மகாஸ்வாமியின் அருட் பிரசாதங்களை பெற்றுக் கொண்டார். நானும் அவரை பின்பற்றி நன்கொடை தந்து பிரசாதங்களை பெற்றுக் கொண்டேன்.

அடியேன் ஸ்வாமி வெளி மண்டபத்தில் அமர்ந்து கொண்டு லலிதா சகஸ்ரநாமத்தினை பாராயணம் செய்தார். அவர் அருகில் அமர்ந்து கொண்டு நானும், குமார்ஜீயும் கண்மூடித் தியானித்தோம்.

அடியேன் ஸ்வாமியின் பாராயணம் முடிந்ததும், நாங்கள் எழுந்து மணிமண்டபத்தை சுற்றிப் பார்த்தோம்.

ஒரு புறத்தில் மகாஸ்வாமியின் குருபரம்பரையை அற்புதமான புடைப்புச் சிற்பமாக வடிவமைத்திருந்தார்கள். மேலே மகாவிஷ்ணு அரவணையில் அறிதுயிலில், ஆழ்ந்திருக்க அவரை சுற்றி இட வலமாக ரிஷிகள் தியானத்தில் அமர்ந்த கோலத்தில் இருக்க நடுவே ஆதி சங்கரர் அருள் பாலிப்பதாகவும், அவரது சீட பரம்பரையின் தொடர்ச்சியாக மகாஸ்வாமிகள் கீழே வீற்றிருப்பது போலவும் அமைந்த அந்த அருமையான சிற்பத்தைக் கண்டதும், மகிழ்ச்சிப் பெருக்குடன், அடியேன் ஸ்வாமி இந்த சமஸ்கிருத ஸ்லோகத்தை சொன்னார்.

சதாசிவ சமாரம்பாம்
சங்கராசார்ய மத்யமாம்
அஸ்மத் "ஆசார்ய" பர்யந்தாம்
வந்தே "குரு பரம்பராம்"

சதா சிவ பெருமான் முதற்கொண்டு
ஆதி - சங்கராச்சார்யர் இடைக்கொண்டு
வழிவழி வந்த குருக்கள் இன்றளவும்
அத்தனை ஆசார்யர்களுக்கும் வணக்கங்கள்!

இதைத் தொடர்ந்து....சொல்லப்படும் அத்வைத குருபரம்பரை சுலோகம்
...
இது தான் அண்ணா.... என்று அடியேன் சுவாமி என்னிடம் ஸ்லோகங்களை மெல்லிய குரலில் சொன்னார்:

நாராயணம் பத்மபுவம்
வசிஷ்டம் சக்திம் ச
தத்புத்ர பராசரம் ச
வ்யாஸம் சுகம்
கௌடபாதம் மஹாந்தம்
கோவிந்த யோகீந்ரம்
அதாஸ்ய சிஷ்யம்
ஸ்ரீ சங்கராசார்யம்
அதாஸ்ய பத்மபாதம் ச
ஹஸ்தாமலகம் ச
சிஷ்யம் தம் தோடகம்
வார்த்திககாரமன்யான்
அஸ்மத் குரூன்
சந்ததமானதோஸ்மி

இந்த சுலோகத்தினை விளக்கும் வகையில் அடியேன் ஸ்வாமி மேலும் கூறுகையில்...

சுகாசாரியார் வரை...மகன் வழி வந்துண்டு இருந்த குரு பரம்பரை.... சுகாசாரியாரிளிருந்து சிஷ்யர்கள் வழி வருது.....
நாராயணர், பிரம்ம, வசிஷ்டர், சக்தி, பராசரர், வியாசர், சுகர், கௌடபாதர், கோவிந்த பகவத்பாதர், ஸ்ரீ சங்கர பகவத்பாதர்கள்,

...அப்டியே ஸ்ரீ ஆசார்யாளுடன் இருந்த நான்கு சீடர்கள்.....

பத்மபாதர், ஹஸ்தாமலகர், தோடகர் (கிரி என்பது இவரோட இயற் பெயர்), சுரேஸ்வராசார்யார் (இவர் நெறைய வார்த்திகம் எழுதினதால.. வார்த்திககாரர் ன்னு பேரு)...
இவர்கள் தொட்டு...
இன்றுள்ள எங்கள் குருவான சங்கராச்சாரியார் வரை நமஸ்கரிக்கிறேன்.

என்று சமஸ்கிருதம் அறியாத எனக்கு ஸ்லோகத்தை அடியேன் சுவாமி மிக அருமையாக விளக்கினார். இன்றும் நமது பாரதத்தை வழி நடத்தும் தவ யோகிகளாக இந்த ரிஷிகளே விளங்குகிறார்கள் என்பதை எண்ணிப் பார்க்க பெருமையாக இருந்தது.

புண்ணிய பாரதத்தின் குருபரம்பரையை மனதார வணங்கி விட்டு, பின்னர் மறு புறத்தில் இருக்கும் சிவ பிரதோஷ நடனம் புடைப்புச் சிற்பத்தையும் கண்டு வணங்கி மகிழ்ந்தோம்.

பின்னர் இறங்கி வெளியே வந்து மணி மண்டபத்தை கண்ணாரக் கண்டு மகிழ்ந்தோம். பாலாற்றங்கரையின் படுகையில் அமைந்த அழகான, அமைதியான இடம்.

மனசை ஒருமிக்க வைக்கும் அதிர்வுகளை கொண்ட இடம் ஓரிக்கை. மஹா ஸ்வாமிகள் கையால் தேர்ந்தெடுத்து, அவரது அறிவுரைகள், வழிகாட்டல்கள் படி நிர்மாணிக்கப் பட்ட மணிமண்டபம் காலத்தால் அழியாத ஒரு உயிரோவியமாக திகழுகிறது. மஹா சுவாமிகள் இங்கிருக்கும் ஒவ்வொரு அணுவிலும் இருக்கிறார் என்பதை உணர்வால் அறிய முடிகிறது.

பின்னர் நாங்கள் புறப்பட்டு சென்னை வந்து சேர்ந்தோம். நல்லதொரு சத்சங்கம் விளைத்த பயனால் அன்று இரவு நான் மிகவும் அமைதியாக உறங்கினேன்.